இக்கூட்டத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த மதிப்பீடும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அக்டோபர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியாவின் 2019-20 நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போதைய கூட்டத்தில் வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் ரெப்போ வட்டி விகிதம் 135 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் வட்டிக் குறைப்பு இல்லாத நிலையில், ஒவ்வொரு முறையும் வட்டி விகிதத்தைக் குறைக்கமுடியாது என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநரான சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதைப் பார்த்துவிட்டு வட்டி விகிதம் குறித்து அடுத்த முறை ஆலோசிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.