மோடி ஆட்சியில் பொருளாதாரம் வளராது: ப.சிதம்பரம் தாக்கு

2014ஆம் ஆண்டில் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் பயணித்துக்கொண்டிருப்பதாகக் குற்றச்சாட்டு உள்ளது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் பொருளாதார நிபுணர்களும், சர்வதேச ஆய்வு நிறுவனங்களும் அது உண்மைதான் என்று சுட்டிக் காட்டிவருகின்றன.


மோடி இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னரும் இதே நிலை நீடிப்பதாகத் தெரிகிறது.இல்லை என்று கூறிவந்த மத்திய அரசு, ஜூலை - செப்டம்பர் காலாண்டு வளர்ச்சி விவரங்களை வெளியிட்ட பின்னர் அதை ஒப்புக்கொண்டது.


வளர்ச்சியை மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் கூறியுள்ளது. ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 5 சதவீதமாகவும், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 4.5 சதவீதமாகவும் பொருளாதார வளர்ச்சி மங்கியுள்ள நிலையில், அடுத்த காலாண்டில் வளர்ச்சி மேலும் குறையும் என்று அஞ்சப்படுகிறது.